By November 18, 20170 CommentsReport

ஜெய் படத்திற்கு தெலுங்கு டைட்டில்..!!

ஜெய் நடிக்கும் புதிய படத்துக்கு `ஜருகண்டி’ என்று தெலுங்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிச்சுமணி இயக்குகிறார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ரெபா மோனிகா ஜான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் வெளியான `ஜேக்கப்பிண்ட ஸ்வர்கராஜ்ஜியம்’ படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் நிதின் சத்யா, “ஜருகண்டி என்பது தெலுங்கு வார்த்தை என்றாலும் இந்தியா முழுவதும் பரிச்சயமானது. தமிழில் ‘நகர்ந்து கொள்’ என்று பொருள்படும்படியான இதன் தலைப்பு வேகமாக நகரும் திரைக்கதைக்கு பொருந்துவதாக இருப்பதால் இதை தேர்வு செய்தோம்” என்று கூறியுள்ளார். இதுவரை இருபது நாள்கள் நடந்துள்ள படப்பிடிப்பில் 50% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

“டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் மொத்த காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளோம்” என்று நிதின் சத்யா தெரிவித்துள்ளார். சிறுத்தை படத்தில் வில்லனின் மகனாக நடித்த அமித்குமார் திவாரி இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*