By November 18, 20170 CommentsReport

பொங்கலுக்கு ஸ்கெட்ச்..!!

ஸ்கெட்ச் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து பொங்கல் விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ஸ்கெட்ச். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி அன்று ஸ்கெட்ச் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்ததாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்து நிலவிவந்த கேள்விகளுக்கு விடைகாணும் விதமாக பொங்கல் விடுமுறையைக் கணக்கில்கொண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்துவரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்கெட்ச் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், சாமி 2 மற்றும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.

ஒரு வெற்றி படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் கைகொடுக்குமா என்பது ஜனவரி மாதம் தெரியவரும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*