By November 18, 20170 CommentsReport

அமலா பாலுக்குக் குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!!

அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்காகப் பாடலொன்றைப் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கலின் ரீமேக் ஆகும். மம்மூட்டி நடித்த வேடத்தில் அரவிந்த் சாமியும், நயன்தாரா வேடத்தில் அமலா பாலும் நடித்துள்ளனர். மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழிலும் இயக்கியுள்ளார்.

மலையாளப் பதிப்புக்காகப் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்தியுள்ளனர். இரண்டு குழந்தைகளின் பெற்றோராக அரவிந்த் சாமியும் அமலா பாலும் நடித்துள்ளனர். தெறி படத்தில் நடித்த மீனாவின் குழந்தை நைனிகாவும், சேதுபதி படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்த மாஸ்டர் ராகவனும் குழந்தைகளாக நடித்துள்ளனர்.

அம்ரீஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள டூயட் பாடலை, கார்த்திக் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ‘இப்போது ஏன் இந்தக் காதல் என் மீது பாய்கிறதோ?’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

காதலர்களின் ரிங் டோனாக இந்தப் பாடல் நிச்சயம் இருக்கும் என்று இசையமைப்பாளர் அம்ரீஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*