By November 18, 20170 CommentsReport

ஒரே கடைக்குள் முழு படம்..!!

ஒரே வீட்டுக்குள் எடுக்கப்பட்ட படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வந்துள்ளன. தமிழில் அத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ள படம் #பேய் பசி.

டைட்டிலில் இருக்கும் ஹேஷ்டாக் எழுத்து பிழை அல்ல. சமூக வலைதளங்களில் பரவுவதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காக படத்தின் டைட்டிலில் ஹேஷ்டாக்கை பயன்படுத்தியுள்ளனர். ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்கும் இந்த படம் முழுவதும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக கூறும்விதத்தில் உருவாகி வருகிறது.


படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய இயக்குநர் ஸ்ரீனிவாஸ், “நான் பார்த்த ஒரு பெங்காலி படம் முழுக்க ஒரு ஷாப்பிங் மாலில் எடுக்கப்பட்டிருந்தது. #பேய் பசி முழுக்க ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடைபெறும் கதை. இது தமிழ் சினிமாவில் புதிய முயற்சி. திகில், காதல், அமானுஷ்யம் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. யதார்த்தத்துக்கும் மெய் நிகர் யதார்த்தத்துக்குமான ஊடாட்டமாக படம் இருக்கும். படத்தில் பேயை காட்டவே இல்லை. வழக்கமான பேய் படங்களில் இருள் அதிகமாக காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த படம் நல்ல வெளிச்சத்தில் படமாக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீனிவாஸ் சூது கவ்வும், தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார். ஹரிபாஸ்கர், நமீதா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*