By November 19, 20170 CommentsReport

ஜெயம் ரவி: இளம் முயற்சி..!!

ஏ.எல்.விஜய்யின் வனமகன் பட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சௌந்தரராஜன் இயக்கி வரும் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்துவருகிறது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் கார்த்தி தங்கவேலு இப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஹோம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இப்படத்தின் படபிடிப்பை 2017 இறுதியில் துவங்க முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் படத்தின் டைட்டில், ஹீரோயின் மற்றும் இதர நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*