By November 19, 20170 CommentsReport

ஜனவரியில் களமிறங்கும் அனுஷ்கா..!!

பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனுஷ்கா நடித்துவரும் பாக்மதி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்படத்தை ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப் படக் குழு முடிவுசெய்துள்ளது.

‘பாகமதி’ படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் த்ரில்லர் படமாகும். இதில் அனுஷ்கா, ‘ஈரம்’ ஆதி, ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட மலையாள நடிகர்களும் நடிக்கின்றனர். தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்குகிறார். தமன் இசையமைக்க, ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

‘பாகமதி’ படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது. இந்நிலையில் படம் ஜனவரி 26 அன்று வெளியாகும் என்று யூவி கிரியேஷன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. படம் வெளியாக இன்னும் இரு மாதங்கள் இருப்பினும் இப்போதே #Bhaagamathie என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது.

பாக்மதி படத்தை தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் இருமொழிகளில் தயாராக இருக்கும் புதிய படத்தில் அனுஷ்கா ஒப்பந்தமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*