By November 24, 20170 CommentsReport

மலையாள படத்தில் விக்ரம்?..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `ஸ்கெட்ச்’ படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இதில் `சாமி ஸ்கொயர்’ படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

அவரது தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் `ரோஜாப்பூ’.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வினு ஜோசப் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி, பிஜு மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*