By November 30, 20170 CommentsReport

17 வருடங்களுக்கு பிறகு, ஜி.வி.பிரகாஷை இயக்கும் ராஜுவ் மேனன்..!!

தமிழ் சினிமாவில் எதார்த்தத்தை டிரெண்டுக்கு ஏற்றபடி காட்டி, அதில் வெற்றிபெறும் இயக்குநர்களுள் ஒருவர் ராஜுவ் மேனன். பிரபல ஒளிப்பதிவாளரான இவர், `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார். இந்த இரு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், 17 வருடங்களுக்கு பிறகு `சர்வம் தாள மயம்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கோலிவுட்டில் பிசியான நடிகர்களுள் ஒருவராக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக `8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி ஒப்பந்தமாகி இருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் சார்பில் லதா தயாரிக்கிறார். நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா பாடல் வரிகளை எழுதியிருக்கின்றனர்.

ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*