By December 7, 20170 CommentsReport

பிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி தாமதமான படம் `களவாடிய பொழுதுகள்’.

காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஜெய் – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படமும் டிசம்பர் 29-ஆம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*