By December 13, 20170 CommentsReport

ரிலீசுக்கு தயாரான `திட்டம் போட்டு திருடுற கூட்டம்’..!!

2 மூவி ஃபப்ஸ் சார்பில் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்‘.

அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்திரமௌலி சுப்ரமணியன், சாம்ஸ், டேனியல் அனி போப், பிரின்ஸ் நித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் படம் `யு’ சான்றிதழை பெற்றுள்ளது.

அஷ்வத் இசையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற ஜனவரியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*