By December 15, 20170 CommentsReport

ஹாக்கி வீரரின் வலி என்ன?..!!

மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராக கவனம்பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி அடுத்த படத்திற்குத் தயாராகியுள்ளார்.

சுந்தர் சியின் ஆம்பள படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதனையடுத்து பாடகர், பாடலாசிரியர் என வளர்ச்சி அடைந்து நடிகராகவும் இயக்குநராகவும் வெற்றி கண்டுவருகிறார். அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்த மீசைய முறுக்கு படத்தை இயக்கி, இசையமைத்து ஹீரோவாக நடித்திருந்த ஆதி, மீண்டும் சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இதில் ஆதி ஹாக்கி வீரராக நடிக்கிறார். இதற்காகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங் இயக்குகிறார். இதன் பூஜை இன்று (டிசம்பர் 14) சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நாளை தொடங்கவிருக்கிறது.

படத்தின் டைட்டில், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த பட்டியல் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*