By December 17, 20170 CommentsReport

மீண்டும் மங்காத்தா கூட்டணி..!!

அஜித் நடித்த மங்காத்தா படத்தில் த்ரிஷா, அஞ்சலி, ராய் லட்சுமி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இதில் அஞ்சலியும், ராய் லட்சுமியும் மீண்டும் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

தெலுங்கில் ‘குண்டூர் டாக்கீஸ்’ என்ற படத்தைத் தயாரித்த எம்.ராஜ்குமார் தற்போது தயாரிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நந்தி விருது பெற்ற கர்ரி பாலாஜி இதனை இயக்கவுள்ளார். இதில் நடிகைகள் அஞ்சலி, ராய் லட்சுமி இணைந்து நடிக்கவுள்ளனர். இதை ராய் லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் உருவாகவுள்ள இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் மேலும் திரைக்கதை கச்சிதமாக உருவாகியுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள படத்திற்கு மணி ஷர்மா இசையமைக்கிறார். ஆரம்ப கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் டைட்டில், இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*