By December 17, 20170 CommentsReport

சார்லி சாப்ளின் 2: இணைந்த பிரபு..!!

15 வருடங்களுக்கு முன்பு வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் பிரபுவும் இணைந்துள்ளார்.

2002ஆம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சார்லி சாப்ளின்’. இதில் பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். காமெடி படமாக உருவான இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, தன்யா, அதா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது பிரபுவும் இந்தப் படத்தில் தற்போது இணைந்துள்ளார்.

முதல் கட்டப் படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் பிரபு. முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். அம்ரிஷ் இசையமைக்க, செளந்தர்ராஜன் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார்.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தைத் தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனமே சார்லி சாப்ளின் 2-ஐயும் தயாரிக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*