By December 17, 20170 CommentsReport

தொடரும் சிவகார்த்தி சாதனை..!!

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சான்றிதழைப் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளன.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடித்திருக்கும் வேலைக்காரன் திரைப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாக உள்ளது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். அனைவரும் பார்க்கக்கூடிய படமாகத் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள தணிக்கைச் சான்றிதழில், வேலைக்காரன்’ திரைப்படம் 2 மணி 39 நிமிடம் 41 விநாடிகள் ஓடும் படமாக அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்திற்கான விளம்பரத்தை இன்று தொடங்கியிருப்பதாகவும், முன் பதிவு நாளை (டிசம்பர் 17) முதல் துவங்கவிருக்கிறது என்ற தகவலையும் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே `யு’ சான்றிதழையே பெற்றிருக்கின்றன. குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கும்படியான கதைகளையே சிவகார்த்தி தேர்வு செய்வதே இதற்குக் காரணம் எனக் கருதலாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*