By December 17, 20170 CommentsReport

தமிழில் சாய் பல்லவி..!!

Sai Pallavi New Latest HD Photos Fidaa Movie Heroine Sai Pallavi Photo Shoot Images

மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள சாய் பல்லவி தமிழில் முதன்முறையாக அறிமுகமாகவிருக்கும் கரு திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி, தெலுங்கில் அறிமுகமான `ஃபிடா’ படம் பெற்ற வெற்றியால் அங்கும் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ளார். தொடர்ந்து தெலுங்கில் நானியின் ஜோடியாக எம்சிஏ படத்தில் நடித்துவருகிறார். தமிழுக்கு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏ.எல். விஜய்யின் கரு படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார். கரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. படத்தை பிப்ரவரியில் வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாக சௌரியாவும், ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் (கனம்) வெளிவரவுள்ள கரு படம், வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவரவுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*