By December 17, 20170 CommentsReport

கதாநாயகனாகும் ஜெகன்..!!

நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஜெகன் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சின்னத்திரையில் நடிகராக வலம் வந்தவர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், நவீன நாடகங்களில் பயிற்சி பெற்றவர்கள் என பலரும் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகன், கதாநாயகியாக நுழைந்துவரும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் அடுத்தடுத்து எண்ட்ரி கொடுக்கின்றனர். சிவகார்த்திகேயன், மா.கா.பா ஆனந்த்., ரம்யா என நீளும் இந்த பட்டியலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜெகனும் இணைந்துள்ளார். துணை நடிகராகப் பல படங்களில் நடித்திருந்தாலும் முருகலிங்கம் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

முழுக்க காமெடிப் படமாகத் தயாராகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரேஹனா நடிக்கிறார். இயக்குநர் கார்த்திக் ரகுநாத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய முருகலிங்கம் படம் குறித்து டெக்கான் க்ரானிக்கலுக்கு அளித்த பேட்டியில், “சில காரணங்களால் மாடு ஒன்று காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. அது மூலம் பல பிரச்சினைகள் எழுகின்றன. காவல் துறையில் பணியாற்றும் கதாநாயகன் ஜெகன் அதை எப்படி சமாளிக்கிறார் என்று காமெடி கலந்து கூறியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் பிறைசூடன் வில்லனாக நடிக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*