By December 20, 20170 CommentsReport

தமன்னாவின் கண்ணே கலைமானே..!!

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது அவர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். கண்ணே கலைமானே என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தைத் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதுகுறித்த தகவலை அவர் ஏற்கெனவே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமன்னா தர்மதுரை படத்தின் மூலம் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். சீனு ராமசாமி தமன்னாவை சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்கவே தமன்னாவை சீனு ராமசாமி சந்தித்துள்ளார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் படப்பிடிப்பை வருகிற ஜனவரி 19ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*