By December 20, 20170 CommentsReport

விவாகரத்து கேட்கும் டிடி..!!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இதில் இவர் நடத்திவரும் ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கடந்த சில காலமாக டிடிக்கும் அவரின் கணவர் வீட்டாருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் டிடிக்கும் அவரது கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டியில்கூட செல்வி திவ்யதர்ஷினி என்றே டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பரஸ்பரம் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு விவகாரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். இருவரும் ஒருமித்த கருத்தோடு மனு தாக்கல் செய்துள்ளதால், டிடிக்கு எதிர்பார்த்தபடி விவாகரத்து கிடைக்கும் எனத் தெரிகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*