By December 20, 20170 CommentsReport

மோகினி வருகிறாள்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் த்ரிஷா, பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவரும் மோகினி படத்தின் ஒட்டுமொத்த அறிவிப்பையும் ஒரே போஸ்டரில் வெளியிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் நடிப்புப் பயணத்தை தொடங்கிய த்ரிஷா, சினிமாவுக்கு வந்து டிசம்பர் 13ஆம் தேதியோடு 15 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அரவிந்த் சாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’, விஜய் சேதுபதியுடன் ‘96’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்துவரும் த்ரிஷா, ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் ‘மோகினி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இந்தப் படத்துக்கான மொத்த அறிவிப்பையும் ஒரே போஸ்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் ட்ரெய்லரை டிசம்பர் 21ஆம் தேதியும், இசை வெளியீட்டு விழாவை ஜனவரி 12ஆம் தேதியும் நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவான `மதுர’ திரைப்படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*