By December 20, 20170 CommentsReport

சமந்தா பட்ஜெட் உடை..!!

சமந்தாவைப் போலவே மிகவும் கச்சிதமான, அழகான ஆடைகளை நான்காயிரம் ரூபாயில் வாங்க முடியும்.

திரை நட்சத்திரங்களை அழகுக்காகவும், திறமைக்காகவும் ரசிப்பதைத் தாண்டி அவர்களது உடைகளுக்காகவும், அழகுபடுத்திக்கொள்ளும் தனித்துவமான முறைகளுக்காகவும் தொடர்ந்து கவனிப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களின் கண்களில் சிக்கியவர் சமந்தா.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராகவும் இயங்கிவருகிறார் சமந்தா. சமீபத்தில் கரம்பிடித்த தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்திருக்கும் இந்த ஒப்பந்தத்துக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சமந்தா அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையும், கறுப்பு மற்றும் தங்க நிற வரிகளைக் கொண்ட இறுக்கமான ஃபேண்டும் தற்போதைய ஃபேஷன் உலகின் ஹாட் டாக். எத்தனை ஆயிரங்களில் வேண்டுமானாலும் உடை வாங்கக்கூடிய நிலையிலிருப்பவர் Zara மற்றும் Forever 21 ஆகிய உடை நிறுவனங்களின் பேஸிக் உடைகளுக்குச் சென்றது ஏன் என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

Forever 21இன் வெள்ளை நிற சுரசுரப்பான சட்டையின் விலை ரூ.1,500 மட்டுமே. அதேபோல Zara நிறுவனத்தின் வெல்வெட் ஸ்டிரைப் ஃபேண்டின் விலை ரூ.1,900 மட்டுமே. ஜிஎஸ்டி வரியோடு சேர்த்தாலும் மொத்தமே நான்காயிரம் ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. பல பத்தாயிரங்களில் செலவு செய்யாமல், சில ஆயிரங்களில் செலவு செய்தாலும் கிளாஸ் லுக் பெறுவதற்கு Zara, Forever 21 போன்ற நிறுவனங்களின் உடை உதவுகிறது என்பதை மறுக்க முடியாது.


Post a Comment

CAPTCHA
Refresh

*