By December 20, 20170 CommentsReport

புராண கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பலமொழிகளிலும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடித்து வரும் `இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வின், குரு சோமசுந்தரம், ஹனிகா குப்தா, லெஸ்லி த்ரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகரான அபய் தியோல் இந்தப் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்திய புராணங்களில் வரும் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் பயண சாகசப்படமாக உருவாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹோல் ஓர்ல்ட் ஃ பிலிம்ஸ் சார்பில் பஷாக் கஸிலர் பிரசாத்துடன் இணைந்து ரதிந்திரன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். நடிகையாக மட்டுமல்லாது கதையின் நாயகியாகவும் வலம்வரும் ஐஸ்வர்யா, இப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு திறனை மேலும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*