By December 30, 20170 CommentsReport

சல்மானைப் புகழும் காஜல்..!!

பாலிவுட்டின் அழகான ஹீரோ சல்மான் கான் என்று நடிகை காஜல் அகர்வால் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோலிவுட்டில் விஜய், அஜீத், சூர்யா, விஷால் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். ஹிந்தி நடிகர் சல்மான் கானின் 52வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காஜல் தன் ட்விட்டர் பக்கத்தில்,பாலிவுட்டில் மிகவும் அழகானவர் சல்மான் கான். வரும் ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு அருமையான ஆண்டாக அமையும். கவர்ச்சிகரமான உங்களது புன்னகை எல்லோரையும் என்றைக்கும் கவரக்கூடியதாகும். கடவுள் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு’ என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் நடிக்கச் சென்று பெரிய ஹிட் அமையாததால் மீண்டும் தென்னிந்தியப் படங்களுக்கு வந்துள்ள காஜல் தற்போது சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடித்து எப்படியாவது பாலிவுட்டில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சல்மானை பாராட்டிவருகிறார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*