By December 31, 20170 CommentsReport

பாலிவுட்டை விமர்சித்த பிரியங்கா..!!

“பட வாய்ப்புக்காக ஆண்களும் படுக்கைக்குச் செல்கின்றனர்” என்று பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கூறிப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார்.

இந்திப் பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கிலப் படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெங்குயின் ஆனுவல் லெக்சர் இவன்ட் என்ற வருடாந்தர உரை நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்.

தனது சினிமா அனுபவம் குறித்து என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குநரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்குப் பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்ப்புக்காக நான் அனுசரித்துப் போகவில்லை. இது நிச்சயமான உண்மை” என்று தன் அனுபவத்தைக் கூறியுள்ளார்

மேலும் நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அதுதான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு செல்கிறார்கள். இதுதான் இன்றைய பாலிவுட்டில் நடைபெற்றுவருகிறது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*