By December 31, 20170 CommentsReport

கௌதம் படத்தை நிராகரித்த விஷ்ணு..!!

Actor Vishnu Vishal in Prema Leela Pelli Gola Movie Stills

கௌதம் மேனன் தயாரிப்பில் உருவாகவிருந்த பொன் ஒன்று கண்டேன் படத்திலிருந்து வெளியேறி இருப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கவிருந்த படம் ‘பொன் ஒன்று கண்டேன்’. செந்தில் வீராசாமி இயக்கும் இந்தப் படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் ரீமேக்காகும்.

தமிழில் விஷ்ணு நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா ஒப்பந்தமானார். தர்புகா சிவா, எஸ்.ஆர்.கதிர், ஆண்டனி என இந்தப் படத்திற்கு முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற இருந்தனர். இதன் ஃபர்ஸ்லுக் போஸ்டர் கூட வெளியானது.

இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு துவங்க தாமதமாவதால், கால்ஷீட் கொடுக்க முடியாமல் விஷ்ணு விலகியுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், எழில் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment