By December 31, 20170 CommentsReport

காட்டேரி’யில் ஹன்சிகா இல்லை..!!

டீகே இயக்கும் காட்டேரி படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகிவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் டீகே. ஹாரர் காமெடி ஜானரில் இவர் இயக்கும் காட்டேரி படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி முடிவாகாத நிலையிலே டிசம்பர் 13ஆம் தேதி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் வைபவ்க்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானதாக தகவல் வெளியானது. ஆனால் ஹன்சிகா இப்படத்தில் நடிக்கவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

“படக் குழு ஹன்சிகாவை அணுகியது உண்மை. அவரும் ஸ்கிரிப்டை படித்துப்பார்த்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்கவில்லை” என்று கூறியுள்ளனர்.

ஹன்சிகா தற்போது பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த குலேபகாவலி படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். ஷாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுடன் அவர் இணைந்து நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்துள்ளார். “இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜனவரி இறுதியிலோ பிப்ரவரி தொடக்கத்திலோ ஆரம்பமாகும். அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தையும் முடிவு செய்துவிட்டார். அடுத்த வருடம் அதன் அறிவிப்பு வெளியாகும்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*