By December 31, 20170 CommentsReport

படப்பிடிப்பை ரத்து செய்த நிவேதா..!!

படப்பிடிப்பை ரத்து செய்து விட்டுத் தேர்வுக்குத் தயாராகிவருகிறார் நடிகை நிவேதா தாமஸ்.

நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தெலுங்குப் படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். கமலின் பாபநாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்துப் புகழ்பெற்ற நடிகையாக மாறினார். அவர் நடித்த சில தெலுங்குப் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் வருகின்றன.

ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவருகிறார். தேர்வுக்காகத் தயார் செய்ய வேண்டி இருப்பதால் பட வாய்ப்புகளை மறுத்த அவர் இதற்கு முன்னதாக ஒப்புக்கொண்ட சில படங்களின் படப்பிடிப்புகளைக்கூட ரத்து செய்துவிட்டார்.

நிவேதா ஆர்க்கிடெக்ட் பட்டப்படிப்பு படித்துவருகிறார். அதற்கான இறுதி ஆண்டு தேர்வு தற்போது நடக்கிறது. அதில் கவனம் செலுத்தும்படி பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிப்புக்கு விடுமுறை அளித்துவிட்டு, படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் நிவேதா தாமஸ், தேர்வு முடிந்ததும் முழு மூச்சாக சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*