By December 31, 20170 CommentsReport

தமனின் நியூ இயர் ட்ரீட்..!!

ஸ்கெட்ச் படத்தின் கவர் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார்.

விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைக்க, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு ‘வி கிரியேஷன்ஸ்’மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் கனவே கனவே, அட்சி புட்சி, சீனி சில்லாளே ஆகிய மூன்று பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31ஆம் தேதி படத்தின் கவர் பாடல் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு வர உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*