By January 11, 20180 CommentsReport

அமலா பால் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!!

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமலா பால் நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகை அமலா பால் கடந்த வருடம் 1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியிருக்கிறார். அதை அவர் போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர்.

இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கார் பதிவின் ஆவணங்களுடன் அமலா பால் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது வழக்கறிஞர் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்தார். அந்த ஆவணங்களில் புதுச்சேரியில் குடியிருப்பதாக வழங்கிய ஆவணம் மட்டும் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அமலா பால் நேரில் வந்து விளக்க வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பினர். ஆனால் அமலா பால் ஆஜராகவில்லை. தான் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக நினைத்து முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று (ஜனவரி 9) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “முதலில் அமலா பால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் முன்பு வருகிற 15ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, மனு விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

எனவே, அமலா பால் வரும் 15ஆம் தேதி காவல் அதிகாரிகள் முன் ஆஜராவது உறுதியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*