By January 11, 20180 CommentsReport

ரஹ்மான் கச்சேரியில் விஜய்..!!

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஹ்மான் தனது ‘நேற்று இன்று நாளை’ கச்சேரியில் கலந்துகொள்ள விஜய்யை அழைத்துள்ளார்.

மெர்சல் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ரஹ்மானின் கச்சேரியை நேரில் பார்க்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். திரையுலகில் இசையமைப்பாளராக 25 வருடங்களை நிறைவு செய்துள்ள ரஹ்மான் டிசம்பர் மாதம் அகமதாபாத், மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் இசை கச்சேரியை நடத்தினார். மேலும் சென்னை, நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ‘நேற்று இன்று நாளை’ என்ற இசை கச்சேரியை நடத்தவுள்ளார். இதில் கலந்துகொள்ள விஜய்யை அழைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் விஜய் கட்டாயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசை கச்சேரி தொடர்பாக ரஹ்மான் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடந்த 25 ஆண்டுகள் அபாரமாக அமைந்திருந்தது. அது ஒரு அழகான பயணம். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே எனக்கு சிறப்பானவர்கள். அவர்களின் முன் இசை நிகழ்ச்சி நடத்துவதை எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். இந்த தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment