By January 18, 20180 CommentsReport

புதுமுகங்களை நாடும் சுசீந்திரன்..!!

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏஞ்சலினா’. இந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் புதுமுக நடிகர்களை வைத்து அவர் படம் இயக்குவது உறுதியாகியுள்ளது. ‘ஜீனியஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 16) தொடங்கியுள்ளதாக சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படம் குறித்து கூறியுள்ள அவர், ‘‘இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்குக் கல்வியை நாம் திணிப்பதால் அவர்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள், அப்படி மன அழுத்தத்துக்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை என ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி இந்தப் படத்தின் கதையை அமைத்துள்ளேன். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*