By January 18, 20180 CommentsReport

இயக்குநருடன் ஜோடி சேரும் பிரியா..!!

எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாகப் பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா குஷி, நியூ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி இருந்தாலும் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இறவாக்காலம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா ஒருநாள் கூத்து படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாகப் பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*