By January 18, 20180 CommentsReport

வாசுவுக்கு வந்த வாட்ஸ் அப் அதிர்ச்சி..!!

இயக்குநர் பி.வாசு இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இதை அவர் சிரிப்புடன் மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வெற்றிப்பட இயக்குநர்களில் ஒருவரான வாசு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். முப்பது வருடங்களாக திரையுலகில் வலம் வரும் பி.வாசு நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கிய சிவ லிங்கா படம் வெளியானது. இந்நிலையில் வாசு இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி வேகமாக பரவியது. வாட்ஸ் அப் மூலம் இந்த தகவல் அவருக்கே வர அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனவே அவர் பேசிய வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், “என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வணக்கம். என்னைப் பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே வாட்ஸ் அப்பில் வந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. நான் இன்று தான் ஜிம்மில் ஆறு கிலோ மீட்டர் நடந்துவிட்டு வந்த பிறகே இந்த நியூஸ் எனக்கு வந்தது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே சிரிப்பு தான் வருகிறது. நான் நல்லா இருக்கிறேன். ரொம்ப நல்லா இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த வருஷம் மூன்று படங்களை இயக்கவுள்ளேன்” என்று அந்த வீடியோவில் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*