By January 19, 20180 CommentsReport

ஜானகி கேரக்டரில் ரித்விகா..!!

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் படத்தில் ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்க ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார்.

அரசியல், சினிமா என இரு துறைகளிலும் முன்னணியில் விளங்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ஏ.பாலகிருஷ்ணன் திரைப்படமாக இயக்கவுள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக நடிக்க ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். சதீஷ் குமார் எம்.ஜி.ஆராக நடிக்கிறார். எஸ்.எஸ் ஸ்டேன்லி அண்ணாதுரையாக நடிக்கிறார்.

படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய ரித்விகா, “ஜானகியின் கதாபாத்திரத்தை நான் ஏற்று நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு. படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளை தொடங்கிவிட்டேன். ஜானகி எம்.ஜி.ஆரை மணம் முடிக்கும் முன்னர் சில படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் மருதநாட்டு இளவரசி படம் பார்த்து சில குறிப்புகள் எடுத்தேன். இந்த படம் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வை மட்டும் பேசாமல் தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்து பேசும்” என கூறியுள்ளார்.

ரித்விகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த மாதம் படமாக்கப்பட உள்ளது. பிப்ரவரியில் நீண்ட ஷெட்யூல் ஒன்று தொடங்கவுள்ளது. ரித்விகா அடுத்ததாக ஓடவும் முடியாது ஒழியமுடியாது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹாரர் காமெடியில் உருவாகும் அந்த படம் குறித்து பேசும் போது, “இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இது முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும். விரைவில் அதன் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது” என ரித்விகா கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*