By January 21, 20180 CommentsReport

மீண்டும் சீனு ராமசாமி படத்தில் வசுந்தரா..!!

தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் கவனம்பெற்ற நடிகை வசுந்தரா காஷ்யப் மீண்டும் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா காஷ்யப். கிராமப்புறம் சார்ந்த இந்தப் படத்தின் கதைக்களத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் வசுந்தரா.

அந்தப் படத்திற்குப் பிறகு போராளி, சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் தென்மேற்குப் பருவக்காற்றின் நாயகி செல்வி வசுந்தரா சியட்ராவும் (தற்போது வசுந்தரா காஷ்யப்), நானும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம். நான் இயக்கும் படமொன்றில் அவர் நடிக்கவும் இருக்கிறார்” என்று குறிப்பிட்டதுடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஜோடி நடிக்கவிருக்கும் கண்ணே கலைமானே படத்தில்தான் இவர் நடிக்கவுள்ளரா அல்லது வேறொரு படமா என்பது குறித்தான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*