By January 23, 20180 CommentsReport

அடுத்த கட்டத்துக்குச் செல்லும் தமன்னா..!!

இனிவரும் படங்களில் இதுவரை இல்லாத வித்தியாச வேடங்களில் நடிக்கவுள்ளதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை தமன்னா. இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவருகிறார். மேலும், முதன்முறையாக மராத்தி படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராம் குமார் ஷெக்டே இயக்கும் இந்தப் படத்துக்கு ‘ஏ.பி.சி’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் விக்ரமுடன் தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் தமன்னா ஸிஃபி இணையதளப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் “தற்போது, பல புதிய படங்களில் நடித்து வருகிறேன். ஸ்கெட்ச் படத்துக்குப் பிறகு தமிழில் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் ‘குயின்’ ரீமேக்கிலும் மேலும் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறேன். தற்போது வரை ஐந்து படங்கள் இருக்கின்றன. இந்தப் படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான நல்ல வேடங்களில் நடிக்கிறேன். இதுவரை நடிகர்களை மட்டுமே மனதில் கொண்டு கதை எழுதிவந்தார்கள். அந்த நிலை மாறி, நடிகைகளை மனதில் வைத்துக் கதை எழுதும் காலம் இப்போது உருவாகி இருக்கிறது. இதன் மூலம், கதை எழுதும்போதே நாயகிகளின் பாத்திரங்களுக்கும் தேவையான அழுத்தமான காட்சிகளை உருவாக்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர், “இப்போது நான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் நானே எதிர்பார்க்காத அழுத்தமான வேடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு நான் நடிக்கும் படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படங்களாக அமையும்” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*