By January 23, 20180 CommentsReport

விஜய் படத்தில் ஜெயமோகன்..!!

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி என விஜய் நடித்த இரு படங்களும் வெற்றிப் படங்களாக அமைய, மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தில் விஜய்யின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் அமைந்திருந்தன.

சமீப காலமாக விஜய் தனது படங்களில் கட்டாயம் அரசியல் கருத்துகளைக் கூறி வருகிறார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து பேசிய வசனம் சர்ச்சையை கிளப்பியது. கத்தி படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி விவசாயப் பிரச்னைகளை பேசியது போல் இந்தப் படத்தில் மீனவர்களின் பிரச்னையைப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கதை, வசனம் எழுதிய ஜெயமோகன் இந்தப் படத்தில் வசனகர்த்தாவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடல், மரியான் ஆகிய படங்கள் கடற்புர பின்னணியில் அமைந்து அனைத்து பாடல்களும் பெரியளவில் வரவேற்பு பெற்றன. ஓப்பனிங் பாடலின் படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 21) சென்னை முட்டுகாட்டில் நடைபெற்றது. சோபி நடன இயக்கம் செய்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*