By January 23, 20180 CommentsReport

வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது..!!

ஜியோ-பிலிம்பேர் விருது விழாவில் வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

63ஆவது ஜியோ-பிலிம்பேர் விருது விழா மும்பையில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 20) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ஷாருக் கான் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினர். இதில் 2017ஆம் ஆண்டின் சிறந்த பாலிவுட் படங்கள், நடிகர், நடிகைகள் என 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த படத்துக்கான விருது ‘இந்தி மீடியம்’ திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குநருக்கான விருது ‘பரேலி கி பர்பி’ படத்தை இயக்கிய அஸ்வினி அய்யருக்கு வழங்கப்பட்டது. ‘இந்தி மீடியம்’ படத்தில் சிறப்பாக நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘தும்ஹாரி சுலு’ படத்தில் சிறப்பாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருது மாலா சின்ஹாவுக்கும் பப்பி லஹிரிக்கும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், உலக அழகி மனுஷி சில்லார், பாலிவுட் நடிகைகள் கஜோல், சோனம் கபூர், கொங்கனா சென் ஷர்மா, ரகுல் ப்ரீத் சிங், மாதுரி தீக்‌ஷித், ரேகா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*