நாவல் திரைப்படமாகும் படத்தில் ரம்யா..!!
நெசவாளர்கள் பிரச்சினையைப் பேசும் படமாக உருவாகவிருக்கும் சங்கத்தலைவன் படத்தில் கதையின் நாயகியாக ரம்யா சுப்ரமணியன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 22) துவங்கியுள்ளது.
இந்தப் படம் எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித் தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் பிரச்சினையை ஒரு முற்போக்கு இயக்கத்தின் பின்னணியில் விவரிக்கும் நாவல் இது.
இந்நாவலை `உதயம் NH4′ படத்தை இயக்கிய மணிமாறன் சங்கத்தலைவன் என்ற பெயரில் படமாக்க இருக்கிறார். வெற்றிமாறன் தனது ‘கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம்’ மூலம் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தில் நெசவாளர்கள் சங்கத் தலைவராக சமுத்திரக்கனி நடிக்க, ரம்யா, கருணாஸ், சுனுலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும் வெங்கடேஷ் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர். இதன் படப்பிடிப்பு சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.