By January 25, 20180 CommentsReport

காலா : ரஜினிக்கு நோட்டீஸ்..!!

காலா படத்திற்குத் தடை கோரிய வழக்கில் நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி-பா.ரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் காலா. இந்தப் படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்துகொண்டிருக்கும்போது இப்படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என சென்னை காரம்பாக்கத்தைச் சார்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இது குறித்து தென்னிந்திய வர்த்தக சபை, ரஜினியும் ரஞ்சித்தும் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து கடந்த ஜூலை 20ஆம் தேதி ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜனவரி 24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ரஜினி, இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய வர்த்தகசபைக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*