By January 27, 20180 CommentsReport

ஸ்ரீதேவியைப் பின்தொடரும் ஜான்வி..!!

தமிழ்த் திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்று அங்கும் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரீ தேவி. அவரைப் பின்பற்றி அவரது மகள் ஜான்வி கபூரும் திரையுலகில் வலம்வரத் தொடங்கியுள்ளார்.

மராத்தியில் வெளியான சாய்ரத் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த ஜான்விக்கு அந்தப் படம் நல்ல அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. தற்போது அவர் மற்றொரு ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் வெளியான டெம்பர் படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளது. ரோகித் ஷெட்டி இயக்கவுள்ள இப்படத்திற்கு சிம்மா என பெயரிடப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஜான்வி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கிளுக்கு அளித்த பேட்டியில், “காஜல் அகர்வாலை விட ஜான்வி இந்தப் படத்தில் அதிக காட்சிகளில் இடம்பெறுவார். இணை தயாரிப்பாளரான கரண் ஜோஹர்தான் ஜான்வியை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்கக் கூறினார். ஜான்வியின் தந்தை போனி கபூர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் இந்தப் படத்தில் ஜான்வி நடிக்க வந்த வாய்ப்பை நிறுத்திவைத்தார். ஆனால் ஜான்வியின் முந்தைய படமான தாடக்கின் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் கதாபாத்திரத்தை மாற்றியமைக்கவுள்ளதாகவும் ரோகித் ஷெட்டியின் கமர்ஷியல் படமான இதில் நடித்தால் அவரது திரைப்பயணம் நன்றாக அமையும் என போனி கபூருக்கும் ஸ்ரீ தேவிக்கும் உறுதியளித்து சம்மதிக்கவைத்துள்ளார்” என்று கூறியுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*