By January 27, 20180 CommentsReport

நாடோடிகள் 2: மிரட்ட வருகிறார்கள்..!!

நட்பின் கொண்டாட்டம், காதலின் பைத்தியக்காரத்தனம், துரோகத்தின் கோரமுகம் என நாடோடிகள் திரைப்படம், தமிழ் சினிமாவில் ‘லவ் ஸ்டோரி’களுக்கான களத்தை மாற்றியமைத்தது. கௌரவக் கொலையின் குரூரத்தையும், அரசியல் சதுரங்கத்தின் பலி ஆடுகளையும் கண்முன்னே கொண்டுவந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘நாடோடிகள் 2’ திரைப்படம் உருவாகிறது.

நாடோடிகள் திரைப்படம் அதை இயக்கிய சமுத்திரக்கனியை விட, அதில் நடித்த சசிகுமாருக்கு நல்ல அடிப்படையை உருவாக்கியது. அதன்பிறகு நடித்த பல படங்களில் நட்பை அடிப்படையாக வைத்து படங்களை நடித்தவர், சமீபமாகத்தான் அம்மா, தங்கச்சி சென்டிமெண்ட் என ரூட்டை மாற்றியிருக்கிறார். இப்போது மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் 2 திரைப்படத்தில் அஞ்சலி மற்றும் அதுல்யா நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

கவிஞர் யுகபாரதியின் வரிகளில் ஜஸ்டின் பிரபாகரனின் இசை, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் கேமரா பார்வை என மிகவும் வலிமையாக சமுத்திரக்கனி களமிறங்குகிறார். மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருவள்ளூர் அருகேயுள்ள கிராமப்பகுதிகளில் இன்று முதல் தொடங்குகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*