By January 28, 20180 CommentsReport

பத்திரிகையாளர் வேடத்தில் ஐஸ்வர்யா..!!

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சொல்லிவிடவா படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அட்லீ.

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் சொல்லிவிடவா படத்தைத் தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாகக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் காதலின் பொன் வீதியில் எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பெயர் சொல்லிவிடவா என மாற்றப்பட்டது. காதல், காமெடி, ஆக்ஷன் என உருவாகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு ஜோடியாகத் தமிழில் ஹீரோவாக சந்தன் அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினரும் யு சான்றிதழ் அளித்துள்ள நிலையில் தற்போது, படத்தின் தமிழ் வெர்ஷனின் ட்ரைலரை பிரபல இயக்குநர் அட்லீ நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ஐஸ்வர்யாவும் கதாநாயகன் சந்தனும் ஊடகத் துறையில் பணிபுரிவது போலவும் அவர்கள் ராணுவ வீரர்களின் நிலையைப் படமாக்குவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*