By February 1, 20180 CommentsReport

மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அதிதி..!!

மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘காற்று வெளியிடை’. இதில் கார்த்தி நாயகனாகவும், அதிதி ராவ் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அடுத்து சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர்கள் கூட்டணியில் அதிதி ராவ் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெறும் முக்கிய வேடத்திற்கு அதிதியை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*