By February 2, 20180 CommentsReport

தொடரும் ஜாக்குலின்-தப்ஸி சண்டை..!!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை தப்ஸி

தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவுலகிலும் நடித்து வருகிறார் தப்ஸி. வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜூட்வா 2 படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் தப்ஸியும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் தயாரிப்பாளருடன் தப்ஸி நெருக்கமாக இருக்கிறார். இதனால் அவருக்குப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக ஜாக்குலினுக்கும் தப்ஸிக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் என்டர்டெயின்மென்ட் கி ராக் என்ற டி.வி.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தப்சி தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ழ்சியில் இனி எந்த நடிகையுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு தப்ஸி, ‘ஜாக்குலின் பெர்னாண்டஸ்’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார். உடனே ‘ஜாக்குலினா?’ என்று அடுத்த கேள்வி கேட்க, சுதாரித்துக் கொண்ட தப்ஸி ஏற்கனவே “நாங்கள் சேர்ந்து நடித்து விட்டோம். அவர் உடலைக் கச்சிதமாக வைத்திருப்பதைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது” என்று பதில் அளித்துச் சமாளித்தார்.

தன்னைப்பற்றிக் குறை கூறிய ஜாக்குலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் தப்ஸி இப்படிக் கூறியுள்ளார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*