By February 2, 20180 CommentsReport

மணிரத்னம் படத்துக்குத் தயாராகும் சிம்பு..!!

மல்டி ஸ்டார்களால் உருவாகவிருக்கும் மணிரத்னத்தின் படத்துக்காக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் சிம்பு.

மணிரத்னம் இயக்கத்தில் தோல்விப் படங்கள் வந்தாலும் அடுத்து அவர் என்ன படம் இயக்கப்போகிறார் என்கிற ஆவல் ரசிகர்களிடையே எப்போதும் இருக்கும். அதே எதிர்பார்ப்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்களால் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மற்ற நடிகர்களைவிட இந்தப் படம் சிம்புவுக்கு மிக முக்கியமான படமாகும். ஏனென்றால் அவரின் முந்தைய படங்கள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. அதுவும் கடைசியாக நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமும் தோல்வியைத் தழுவியது.

இந்தப் படத்துக்குப் பிறகு சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்துக்கு இசையமைப்பில் கவனம் செலுத்திய சிம்பு, உடல் எடையை சரியாக கவனிக்கவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதால் அதற்காக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படமும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் உடற்பயிற்சி ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதை சிம்பு கேட்டுக்கொண்டு கடுமையாகப் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*