By February 3, 20180 CommentsReport

விக்ரம் பிரபு: குவியும் படங்கள்..!!

தன்னுடைய படங்கள் பெரிதாக வெற்றி பெறாதபோதும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக இருக்கிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி ஜோடி நடித்திருக்கும் ‘பக்கா’ திரைப்படம் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பக்கா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘துப்பாகி முனை’ படப்பிடிப்பில் பிஸியானார். இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து மற்றொரு படத்திற்குத் தயாராகியிருக்கிறார் விக்ரம் பிரபு.

‘அசுரகுரு’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை தமிழக அரசின் விருது பெற்ற ‘அஞ்சனவித்தை’ குறும்படத்தின் இயக்குநர் அ.ராஜ்தீப் உருவாக்கவிருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். த்ரில்லர் பாணியில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

‘ஜே.எஸ்.பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்லிங்கம் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்துவருகிறது. இது குறித்தான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*