By February 3, 20180 CommentsReport

சரித்திரப் படத்தில் மீண்டும் ராணா..!!

பாகுபலியைப் போன்று சரித்திரப் படமாக உருவாகவிருக்கும் மார்த்தாண்டவர்மா படத்தின் நாயகனாக ராணா நடிக்கவிருக்கிறார்.

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலியின் இரண்டு பாகங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் வில்லனாக நடித்த ராணா டகுபதி பல தரப்பினராலும் பாராட்டைப் பெற்றார். தற்போது பிரபல இயக்குநர் கே.மது இயக்கத்தில் மார்த்தாண்ட வர்மா ‘தி கிங் ஆப் திருவாங்கூர்’ என்ற புராணக்கதையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனையொட்டி அவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்பு கவடியாறு அரண்மனைக்குச் சென்று மார்த்தாண்டவர்மா அரச குடும்பத்தினரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அரச குடும்பத்தினர், மார்த்தாண்டவர்மா வரலாறு குறித்த 2 புத்தகங்களை ராணாவுக்கு வழங்கியுள்ளனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராணா, “சரித்திர கதாபாத்திரத்தில், அதுவும் அரசர் மார்த்தாண்ட வர்மா வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிப்பது மிகவும் பெருமை மிக்கது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“கடந்த 8 ஆண்டுகளாக நடந்த ஆய்வுக்குப் பின், அரசர் மார்த்தாண்டவர்மா வரலாற்றின் அடிப்படையில் இந்தத் திரைப்படத்தின் கதை தயாராகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தைப் போன்று இந்தத் திரைப்படத்தையும் 2 பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். எங்களுடன் இசையமைப்பாளர் ரசூல் பூக்குட்டியும் இணைய உள்ளார்” என்று இயக்குநர் கே.மது தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*