By February 3, 20180 CommentsReport

படப்பிடிப்பை முடித்த கிருத்திகா..!!

விஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி தற்போது இயக்கிவரும் படம் காளி. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். சுனைனாவுக்கு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சுனைனா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கவலை வேண்டாம், தொண்டன் ஆகிய படங்கள் பெரிய அளவில் அவருக்கு இமேஜை உருவாக்கவில்லை. எனவே விஜய் ஆண்டனியுடனான இந்தக் கூட்டணி கண்டிப்பாகக் கைகொடுக்கும் என எதிர்பார்த்துள்ளார்.

யோகி பாபு, நாசர், ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், மதுசூதன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்று படத்தின் இறுதிகட்டப் பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் படம் வெளியீட்டுக்குத் தயாராகுமென படக்குழு தெரிவித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*