By February 5, 20180 CommentsReport

தெலுங்கு டப்பிங்கில் விஜய் சேதுபதி..!!

விஜய் சேதுபதி தமிழில் சீதக்காதி, சங்குத்தேவன், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து செல்லும் நடிகராக நடித்துக்கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. தற்போது தனது அசராத நடிப்பாலும், உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடம்பிடித்துவிட்டார்.

இதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் ‘சைரா’ படத்தின் கதைக் கரு. இப்படம் மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது. சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இப்படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். 200க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகர்கள் நடிக்கிறார்கள். சிரஞ்சிவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராவதால், விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இதில் விஜய் சேதுபதி, சுதீப் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். விஜய் சேதுபதி தெலுங்கில் சரளமாக பேசக்கூடியவர். தனது படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன்களில் தெலுங்கில் பேசி அசத்துவார். தற்போது வெளியாகியுள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலும் பல காட்சிகளில் தெலுங்கு பேசி அசத்தியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி சைரா படத்தில் தெலுங்கில் டப்பிங் பேச முடிவெஎடுத்துள்ளாகக் கூறப்படுகிறது. தமிழில் விஜய் சேதுபதியின் பேச்சுக்கும் அவர் நடிப்புக்கும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தெலுங்கு ரசிகர்களை விஜய் சேதுபதி ஈர்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*