By February 7, 20180 CommentsReport

விஜய் படத்தில் இணைந்த இரட்டையர்..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ராம், லட்சுமணன் என்ற இரட்டையர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக ஒப்பந்தமாகியுள்ளனர்.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பைரவா படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, கொல்கத்தாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 20 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை அங்கு படமாக்கவிருக்கிறார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சிகளை ராம், லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வடிவமைக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் தெலுங்கில் பல படங்களுக்குச் சண்டைப் பயிற்சியாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். நந்தி விருதுகளைப் பெற்றுள்ளனர். விஜய் நடிக்கும் படத்திற்கு முதன்முதலாக இவர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*